Sunday, March 12, 2006

படிச்சுட்டு முடிஞ்சா சிரிங்க --- 7-வது பதிவு

1. மேலாளர் vs பொறியாளர்

மேலாளர்கள் அடங்கிய ஒரு குழுவுக்கு ஒரு கொடிக்கம்பத்தின் உயரத்தை அளக்கும் பணி தரப்பட்டது. உடனே, அம்மேலாளர்கள் ஏணிகளையும், அளவு நாடாக்களையும் எடுத்துக் கொண்டு கொடிக்கம்பத்திற்கு விரைந்தனர்! அவர்கள் ஏணிகளில் ஏறி விழுவதும்,அளவு நாடாக்களை நழுவ விடுவதும் என்று அந்த இடத்தையே களேயபரம் செய்த வண்ணம் இருந்தனர் !

அப்போது அப்பக்கம் வந்த ஒரு இளம் பொறியாளர், அம்மேலாளர்கள் எதற்காக முயற்சிக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டு, அந்த கொடிக்கம்பத்தை நிலத்திலிருந்து பெயர்த்தெடுத்து, அதை படுத்த வாக்கில் நிலத்திலிட்டு அளவெடுத்து, அளவை மேலாளர் ஒருவரிடம் கூறினார்.

அவ்விடத்தை விட்டு அப்பொறியாளர் அகன்றவுடன், மேலாளர்களில் ஒருவர், இன்னொருவரைப் பார்த்து சிரித்தபடி கூறினார், "இப்படித் தான் பொறியாளர்கள் வேலை செய்கிறார்கள் ! நாம் உயரத்தை அளக்கக் கேட்டால், அவர்கள் நீளத்தை அளந்து தருவார்கள்" !!!!!

மேலே சொன்ன குட்டிக் கதையின் நீதி என்ன ???
***************************************************

2. வேறுபடும் கருத்துப் பரிமாற்றத் திறன் !

ஒரு ப்ராஜெக்ட் குறித்து மென்பொருளாளர் தன் ப்ராஜெக்ட் லீடரிடம்:

இந்த ப்ராஜெக்டை நம்மால் செய்யவே இயலாது ! தற்போதுள்ள டிசைனில் பெரிய மாற்றம் செய்ய வேண்டுவதோடு, இந்த பழமையான சிஸ்டம் குறித்த அறிவு நம் அணியில் ஒருவருக்கும் கிடையாது ! மேலும், அந்த சிஸ்டம் எழுதப்பட்ட கணினி மொழியில் நம்மில் யாருக்கும் பயிற்சி கிடையாது. இது போன்ற ப்ராஜெக்டை நம் நிறுவனம் ஏற்கவே கூடாது என்பதே என் கருத்து !

ப்ராஜெக்ட் லீடர் தன் மேலாளரிடம்:

இந்த ப்ராஜெக்டில் ஒரு டிசைன் மாற்றம் தேவைப்படுகிறது. இம்மாதிரி வேலைகளில் நம் அணியினர் எவருக்கும் அனுபவம் இல்லை. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள கணினி மொழி குறித்து அணியினருக்கு பயிற்சி தருவது அவசியமாகிறது! இந்த ப்ராஜெக்டை மேற்கொள்ள நாம் தற்போது தயாராக இல்லை என்பதே என் கருத்து !

மேலாளர் முதல் நிலை மேலாளரிடம்:

இந்த ப்ராஜெக்டில் ஒரு டிசைன் மாற்றம் தேவைப்படுவதோடு, இம்மாதிரி வேலைகளில் நமக்கு அனுபவம் குறைவு! நம் நிறுவனத்தில் இந்த ப்ராஜெக்ட் வேலையை எடுத்துச் செய்ய வல்ல, சரியாக பயிற்றுவிக்கப்பட்ட ஆட்கள் அதிகம் இல்லை! இந்த ப்ராஜெக்டை நம்மால் செய்ய இயலும், ஆனால் கால அவகாசம் சற்று அதிகம் தேவைப்படும் என்பதே என் கருத்து !!!

முதல் நிலை மேலாளர் சீனியர் மேலாளரிடம்:

இந்த ப்ராஜெக்ட் வேலை ஒரு டிசைன் மறுவடிவமைப்பு குறித்தது! இம்மாதிரி வேலைகளைச் செய்ய நம் நிறுவனத்தில் சிலர் உள்ளனர், இன்னும் சிலருக்கு, இதற்குத் தேவையான கணினி மொழி குறித்த அனுபவம் உள்ளது. இவர்கள், பிறருக்கு பயிற்சி அளிக்க முடியும்! இந்த ப்ராஜெக்டை நாம் அவசியம் மேற்கொள்ள வேண்டும், சற்று எச்சரிக்கையோடு, என்பதே என் கருத்து!

சீனியர் மேலாளர் நிறுவன முதல்வரிடம்:

இந்த ப்ராஜெக்ட், இது போன்ற டிசைன் மறுவடிவமைப்பில் ஏற்படும் தொழில் நுட்ப சவால்களை எதிர்கொள்ள வல்ல, நமது நிறுவனத்தின் திறனை, நமது போட்டியாளர்களுக்கும், பிறருக்கும் பறைசாற்றும்! இதற்கு வேண்டிய திறன்களும், இதை வெற்றிகரமாக செயல்படுத்தக் கூடிய ஆட்களும் நம்மிடம் உள்ளனர்! நம்மில் அனுபவமிக்க சிலர், இந்த ப்ராஜெக்ட் வேலைக்குத் தேவையான பயிற்சியை, இன்னும் பலருக்கு, ஏற்கனவே அளித்து விட்டனர்! எனவே, இம்மாதிரி ப்ராஜெக்ட் நம் கையை விட்டு நழுவ நாம் கண்டிப்பாக விடக் கூடாது என்பதே என் கருத்து !!!!!


நிறுவன முதல்வர் வாடிக்கையாளரிடம்:

எங்கள் நிறுவனம், இது போன்ற ப்ராஜெக்ட்களை பல பெரிய வாடிக்கையாளர்களுக்கு பல முறை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறது! இம்மாதிரி சவாலான வேலைக்கு எங்கள் நிறுவனத்தை நீங்கள் தேர்ந்தெடுப்பது மிகச் சரியான முடிவாக இருக்கும் என்று என்னால் உறுதியாகக் கூற முடியும்! இந்த ப்ராஜெக்டை, நீங்கள் கேட்கும் காலக்கெடுவுக்குள் நாங்கள் இந்த ப்ராஜெக்டை வெற்றிகரமாக செய்து முடிப்போம் என்பதே என் கருத்து !!!!!


என்றென்றும் அன்புடன்
பாலா

13 மறுமொழிகள்:

Boston Bala said...

;-)))

Simulation said...

"இந்த நிறுவனம் இந்த பொரொஜெச்டை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்துள்ளது. நாங்கள் மிகவும் சந்தோஷமாக உள்ளோம்."

- வாடிக்கையாளர்

(என்னது. மண்ணா. மீசைக்கு சும்மா, ப்ரௌன் கலரிலே டை அடிச்ச்சுப் பார்த்தேன்.)

ilavanji said...

பாலா,

மொத ஒன்னு செமதமாசுங்க!!! :)))

enRenRum-anbudan.BALA said...

Boston BALA, simulation, இளவஞ்சி,

karuththukkaLukku nanRi.

ச.சங்கர் said...

பாலாஜி, என்ன திரும்பவும் பதிவு போட ஆரம்பிச்சிட்டியா?!!

enRenRum-anbudan.BALA said...

சங்கர்,
என்ன, திரும்பவும் பதிவுகளைப் படிக்க ஆரம்பிச்சுட்டாயா ?????

Just to keep in TOUCH!!! அவ்ளோ தான் :)

என்றென்றும் அன்புடன்
பாலா

SP.VR. SUBBIAH said...

இரண்டு விற்பனைப்பிரதிநிதிகள் தங்கள் கம்பெனிக்காக ஒரு மாவட்டத்திற்குச் சென்று ஆய்வுநடத்திவிட்டுவந்து தங்கள் கம்பெனியின் மேலாளருக்கு இவ்விதம் பரிந்துரைத்தார்கள்

முதம் ஆள்: இந்த ஊரில் யாருமே காலணி அணிவதில்லை. ஆகவெ நாம் இந்த ஊரில் நமது காலணி விற்பனைக் கிளையைத் திறப்பது வேஸ்ட்

2வது ஆள்: இந்த ஊரில் நமது காலணி விற்பனைக் கிளையைத் திறந்தால் விற்பனை அமோகமாக இருக்கும்

பாஸிட்டிவ் திங்கிங்கில்தான் எல்லாம் இருக்கிறது ஸ்வாமி !

enRenRum-anbudan.BALA said...

//மேலே சொன்ன குட்டிக் கதையின் நீதி என்ன ???
//

யாருமே இதுக்கு பதில் சொல்லலியே ! நீதி என்னவென்றால்,

"நீங்கள் எவ்வளவு நல்ல முறையிலும், புத்திசாலித்தனமாகவும் நடந்து கொண்டாலும், உங்கள் மேலாளர் உங்கள் மீது தவறு கண்டுபிடிப்பதிலேயே குறியாக இருப்பார் !!!"

ஜோ/Joe said...

பாலா,
என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம் ? ராம்கி மாதிரி எதாவது புத்தகம் எழுதிட்டிருக்கீங்களா?

enRenRum-anbudan.BALA said...

ஜோ,
புத்தகமா, நானா ???? வேலைல சம்ம பிரஷர், அதான் !!!

மேலும், இந்த மாதிரி இடைவேளை நல்லது தானே ! அதாவது, கொஞ்ச நாள், நீங்களெல்லாம் தொல்லை இல்லாம இருக்கலாமில்ல ;-)

விசாரித்ததற்கு நன்றி.

என்றென்றும் அன்புடன்
பாலா

said...

பாலா நல்ல நகைச்சுவை. ரசித்தேன்.

ரொம்ப பிசிங்கறீங்க. ஆனா டோண்டு கல்யாணத்துல நீங்கதான் மாப்பிள்ளைத்தோழனாம்? பந்தி எல்லாம் பரிமாறினீங்களாம்?

சந்திப்பு said...

சிரிக்கிறதா? சிந்திக்கிறதான்னு புரியலைங்க

ஆனா ஒன்ணு மட்டும் புரிஞ்சுக்கிட்டேன். நடைமுறை அனுபவமும் - புத்தக அறிவும் ஒன்று சேரனும், இரண்டும் தனித்தனியே செயல்பட்டால் ஒரு கை, ஒரு கால் ஊணம்தான்.

அடுத்து ஒரு லீடர் என்பவர் பழைய நிலைமைகளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். புதிய நிலைமைக்கு மாறுவதற்கும் தயாராக இருக்க வேண்டும். நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று இருக்கக்கூடாது.

enRenRum-anbudan.BALA said...

வெங்காயம்,

//பாலா நல்ல நகைச்சுவை. ரசித்தேன்.

ரொம்ப பிசிங்கறீங்க. ஆனா டோண்டு கல்யாணத்துல நீங்கதான் மாப்பிள்ளைத்தோழனாம்? பந்தி எல்லாம் பரிமாறினீங்களாம்?
//
நன்றி !! தங்கள் நகைச்சுவையான பேச்சும் ரசிக்கும்படி உள்ளது :)

சந்திப்பு,
நன்றி. சிந்திக்க வைக்கும் கருத்து, தங்களுடையது.

என்றென்றும் அன்புடன்
பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails